சிறையில் இருந்து மாலை வெளியே வருகிறார் சோபியா.. போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வாய்ப்பு
இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வருகிறார் மாணவி சோபியா.
சென்னை: இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வருகிறார் மாணவி சோபியா. சோபியாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்ற விமானத்தில் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா கோஷமிட்டார். இதனால் அவருக்கும் தமிழசை சௌந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இது வீடியோவாக வெளியானது.
இதுகுறித்து தமிழிசை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சோபியா கைது செய்யப்பட்டார்.

எதிர்ப்பு இல்லை
இந்த நிலையில் தற்போது மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் அளிக்க தமிழிசை தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஜாமீன் கிடைத்தது
இந்த நிலையில் இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வருகிறார் சோபியா. ஜாமீன் கிடைத்த நிலையில் மாலை வெளியே வருகிறார். இன்று மாலை ஆறு மணிக்குள் அவர் விடுவிக்கப்படுவார். நிபந்தனை எதுவும் இல்லை என்பதால், அவர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டியது இல்லை.

பாதுகாப்பு
சோபியாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து இன்னும் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இரண்டு போலீசார் சோபியாவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏன் பாதுகாப்பு
சோபியாவின் தந்தை தூத்துக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தமிழிசையின் தொண்டர்களும் பாஜக நிர்வாகிகளும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்றுள்ளார். எப்படி வாழ்கிறீர்கள் என்று மிரட்டல் விடுத்ததாக புகாரில் குறிப்பிட்டார். இதனால் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications