நெல்லை, நாகர்கோவில், கோவை, ஈரோட்டில் இருந்து சென்னைக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னை: தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே இயக்க உள்ள ரயில்களின் பட்டியல் வருமாறு:
1. திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்: (ரயில் எண் 06012) நெல்லை-எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 21.10.2014 அன்று மாலை 6.10 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு எழும்பூர் வந்தடையும். 1 ஏசி இரண்டடுக்கு பெட்டி, 3 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஆகியவை இந்த ரயிலில் இணைக்கப்பட்டு இருக்கும்.

கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
2. நாகர்கோவில்-எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் (Train No.06352) 20.10.2014ம் தேதி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மாலை 5.05 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 6.15 மணிக்கு எழும்பூரை சென்றடையும். முதல் வகுப்பு ஏசி பெட்டி தவிர பிற பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டிருக்கும். நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
3. சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் (No.06351) 24.10.2014 அன்று, மதியம் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். முதல் வகுப்பு ஏசி பெட்டி தவிற பிற பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
4. எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில்: இந்த ரயில் (Train No.06745) எழும்பூரில் 27.10.2014 அன்று, இரவு 10.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தை வந்தடையும். முதல் வகுப்பு ஏசி பெட்டியை தவிர பிற கோச்சுகள் இணைக்கப்பட்டிருக்கும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பதிரிப்புளியூர், சிதம்பரம், மையிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
5. ஈரோடு-சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் பகல் நேர சிறப்பு ரயில்: இந்த ரயில் (No.06606) 20.10.2014 அன்று மதியம் 1.45 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 8.10 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். சேலம், பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
6. கோவை-சென்னை சென்ட்ரல் பகல் நேர சூப்பர் பாஸ்ட் ரயில்: இந்த ரயில் (Train No.06608) கோவையில் இருந்து 21.10.2014 அன்று காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். திருப்பூர், ஈரோடு, சேலம், பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு 05.10.2014 தேதி (நாளை) தொடங்குகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications