தண்ணி இல்லை, சுத்தம் இல்லை... ரயிலா இது... குமுறலில் தென் மாவட்ட பயணிகள்!
நெல்லை: தென் மாவட்டங்களில் இயக்கப்படும் ரயில்களில் பராமரிப்பு படுமோசமாக இருப்பதால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில் பல ரயில்களில் பராமரிப்பு படுமோசமாக இருப்பதாக புகார் எழுந்து வருகின்றது.
குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லை, குமரி வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தண்ணீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் கழிவறைகளில் தூர்நாற்றம் வீசுகிறது.

நெல்லை, கன்னியாகுமரி தாதர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சராசரியாக 1000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்த ரயில்களில் பராமரிப்பு கேள்வி குறியாகி வருகிறது. இதற்கு காரணம் நெல்லை, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணியை தனியாருக்கு ஓப்படைத்தது தான் என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெட்டிகளை சுத்தப்படுத்துதல், தண்ணீர் பிடித்தல் உள்ளிட்ட பணிகளை ஓப்பந்த பணியாளர்கள் செய்து வருகின்றனர். ரயில்வே துறைக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் பராமரிப்பு பணியில தொடர்பு இல்லை. சிக்கன நடவடிக்கை என கூறி ரயில்வே பணிகளை தனியாரிடம் கொடுத்துளளனர்.
இந்த பணிகளை ஓப்பந்த தொழிலாளர்கள் சரிவர செய்யவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் மட்டுமே நெல்லை எக்ஸ்பிரஸ், ஜம்மு தாவி, பிலாஸ்பூர், தாதர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் பீட்லைனில் சுத்தம் செய்யப்படுகின்றன. இங்கு போதிய ஊழியர்கள் இல்லை.
இதுகுறித்து நெல்லை பயணிகள் சிலர் கூறுகையில், ரயில்வேயின் சிக்கன நடவடிக்கையால் பல ரயில்களில் பராமரிப்பு படுமோசமாக இருக்கிறது. குறிப்பாக சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் இருந்து கேரள செல்லும் அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மதுரையை தாண்டினால் தண்ணீரே இல்லாத நிலை காணப்படுகிறது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கழிவறை தண்ணீரை பயன்படுத்தி குளிப்பது கொடுமை என்று வருத்ததுடன் தெரிவித்தனர். குறிப்பாக ஓரு பெட்டியை சுத்தம் செய்ய தனியார் ஓப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.20தான் கொடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பணிகளை சரிவர செய்யாமல் இருப்பதாக குறறம் சாட்டப்படுகிறது. இதனால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.
பயணிகளை ரயில்வே எப்போதுதான் மதிக்கப் போகிறதோ... ஒரு வேளை "அந்நியன்" யாராவது வந்துதான் சரிப்படுத்த வேண்டுமோ??
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications