சபரிமலையில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய சிறப்பு வசதி
தி்ருவனந்தபுரம்: சபரி்மலை ஐயப்பன் கோவிலில் இந்த வருட மண்டல பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.
இதையொட்டி பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தேவசம் போர்டு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இதனால் இவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு இந்த வருட மண்டல சீசன் முதல் சபரிமலை வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எளிதில் தரிசனம் செய்யும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கோயில் அருகே சன்னிதானத்தில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. கோயில் வாளகத்தில் வடக்கு பகுதியில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
சபரிமலை வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் 18 ஆம் படி வழியாக சென்று பாலத்தில் ஏறி வடக்கு நடை வழியாக வந்து தரிசனம் செய்ய வேண்டும். தரிசனம் முடிந்த பிறகு வடக்கு நடை வழியாக திரும்பி செல்ல வேண்டும். வரும் மண்டல சீசன் முதல் இந்த வசதியை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications