வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா? தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்
சென்னை : வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணியையொட்டி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாக்குச் சாவடி மையங்களில், இன்று சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தத்தின் படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது ஆகிய பணிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கான சிறப்பு முகாம் இன்றைய தினம் தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது என்றும் புதிய உறுப்பினர்களை சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய விரும்புவோர், உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில், இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, elections.tn.gov.in/eregistration என்ற இணையதள முகவரியிலும், வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications