தீபாவளி பண்டிகை: திருச்சி, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்; முன் பதிவு தொடங்கியது
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் 29-ம் தேதி சிறப்பு ரயில் (06026) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து 29-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு பறப்பட்டு இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இதேபோல் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 31-ம் தேதி சிறப்பு ரயில் (06025) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 31-ம்தேதி காலை 9 மணியளவில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30-க்கு திருச்சி சென்றடையும்.

எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு 29-ம் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (06041) 29-ம் தேதி இரவு 10.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு 30-ம் தேதி சுவிதா சிறப்பு ரயில் (82610) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 30-ம் தேதி மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications