தொடர் பண்டிகைகளை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
தொடர் பண்டிகைகளை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: கிறிஸ்துமஸ், வருடப் பிறப்பு, சபரிமலை சீசன், தைப்பூசம், பொங்கல் பண்டிகை வருவதையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* நெல்லை-செங்கல்பட்டு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06062) 15, 22, 29, ஜனவரி 5, 12, 19, 26, பிப்ரவரி 2, 9 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

* செங்கல்பட்டு-நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (06061) 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27, பிப்ரவரி 3, 10 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு இரவு 2.40 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
* நெல்லை-செங்கல்பட்டு வாராந்திர சிறப்பு ரெயில் (06064) 18, 25, ஜனவரி 1, 8, 15, 22, 29, பிப்ரவரி 5 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
* செங்கல்பட்டு-நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (06063) 19, 26, ஜனவரி 2, 9, 16, 23, 30, பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து 1.45 மணிக்கு புறப்பட்டு 2.40 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
* திருச்சி-சென்னை எழும்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (06066) 12, 19, 26, ஜனவரி 2, 9, 16, 23, 30, பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
* சென்னை எழும்பூர்- திருச்சி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (06065) 13, 20, 27, ஜனவரி 3, 10, 17, 24, 31, பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
* கோவை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில் (06068) 19, 21, 26, 28, ஜனவரி 2, 4, 9, 11, 16, 18, 23, 25, 30, பிப்ரவரி 1, 6, 8 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
* செங்கல்பட்டு-கோவை இடையே சிறப்பு ரெயில் (06067) 20, 22, 27, 29, ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31, பிப்ரவரி 2, 7, 9 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு கோவையை சென்றடையும்.
* ஈரோடு-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06028) 17, 18, 24, 25, 31 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.45 மணிக்கு ஈரோட்டில் புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
* சென்னை எழும்பூர்-ஈரோடு இடையே சிறப்பு ரெயில் (06027) 17, 18, 24, 25, 31 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.20 மணிக்கு ஈரோட்டை சென்றடையும்.
* கொல்லம்-சென்னை சென்டிரல் இடையே சுவிதா சிறப்பு ரெயில் (82632) ஜனவரி 8-ந்தேதி மதியம் 3.35 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications