என்மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்- செந்தில்
மதுரை: என்மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் செந்தில் கூறியிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன் நடிகர் செந்தில் இறந்து விட்டதாக வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவியது.இதனால் பலரும் அவரைத் தொடர்பு கொண்டு விசாரித்து அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த செந்தில் இதுபோல வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மதுரை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

புகாரில் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
செந்திலின் புகாரை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை சைபர் கிரைம் போலீசாரிடம் நேரில் வந்து செந்தில் ஒப்படைத்திருக்கிறார்.
காவல்நிலையத்தில் ஆஜரானது குறித்து செந்தில் ''என் புகார் குறித்து மேலும் சில விவரங்களை சைபர் கிரைம் போலீசார் கேட்டதால் நேரில் வந்திருக்கிறேன்.
என்மீது அவதூறு பரப்பியவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications