சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானதை ஏற்கக் கூடாது.. மதுசூதனன் தேர்தல் ஆணையத்தில் மனு
சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானதை ஏற்கக் கூடாது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானதை ஏற்கக் கூடாது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸுடன் ஆளுநரையும் அவர் நேற்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வானதை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மேலும், தற்காலிக பொதுச்செயலாளராக ஒருவரை தேர்ந்தெடுக்க அதிமுக விதியில் இடமில்லை என்று மனுவில் குறிப்பட்டுள்ள மதுசூதனன், ஒருவர் பொதுச் செயலாளராக அமர வேண்டுமானால் கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு மேலும் நெருக்கடி முற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications