20 தமிழக மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

மன்னார்: தமிழகத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை சிறை பிடித்து வந்து மன்னாரில் வைத்துள்ளது இலங்கை கடற்படை.

இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர்களை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கூறுகிறது இலங்கை கடற்படை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மன்னார் காவல்துறையினரிடம் 20 பேரையும் ஒப்படைத்துள்ளது இலங்கை கடற்படை. அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

அடுத்தடுத்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடிப்பதும், சிறையில் அடைப்பதும் தொடர் கதையாகி வருகிறது. ஆனால் இந்திய அரசோ வாய் மூடி தொடர்ந்து மெளனமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+