தமிழக மீனவர்கள் 54 பேர் திடீர் விடுதலை: விடுவிக்கப்படாவிட்டால் நாளைய பேச்சு நிறுத்தம்- தமிழக அரசு!
ராமேஸ்வரம்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது. சென்னையில் தமிழகம்- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ள நிலையில் 54 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்கள் கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும் வருகின்ற 27-ந் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து 33 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். அவர்களை வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நாளை சென்னையில் நடைபெறும் நிலையில் தமிழக மீனவர்களை கைது செய்வது எப்படி சரியாகும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதனிடையே தமிழக-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதை முன்னிட்டு இலங்கை சிறைகளில் உள்ள 54 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications