இலங்கை கடற்படையினர் தாக்குதல்… 7 தமிழக மீனவர்கள் காயம்
ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கற்களை எறிந்து தாக்கியதில் 7 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஜெபமாலை என்பவரின் நாட்டுப்படகில் செவ்வாய்க்கிழமை அன்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவருடன் ராயப்பன், மரிய திரவியம், மோட்சம், முனியசாமி, முனீஸ்வரன், உமயசுந்தரம் ஆகியோர் சென்றிருந்தனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் அங்கு வந்துள்ளது. இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு எச்சரித்துள்ளனர். மேலும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் எச்சரித்துள்ளனர். பின்னர், தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மீனவர்கள் சென்றது நாட்டுப் படகில் என்பதால் கற்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பாம்பன் அருள் நகரைச் சேர்ந்த ராயப்பன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதிகாலையில் கரைக்குத் திரும்பிய மீனவர்கள் ராயப்பனை பாம்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications