கச்சத்தீவு அருகே 14 மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அட்டூழியம் தொடக்கம்!
ராமேஸ்வரம்: இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்களையும், அவர்களது 3 படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 விசைப்படகுகளையும் அதில் இருந்த 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்து சென்றுள்ளனர். சிறைப்பிடித்து செல்லப்பட்டுள்ள மீனவர்கள் காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சிறை பிடிக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் 126 பேர் தீபாவளிக்கு முன் விடுதலை செய்யப்பட்டு கடந்த 13 ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினார்கள். இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் சிறைபிடிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் துவங்கி இருப்பது தமிழக மீனவர்களை வேதனை அடைய செய்துள்ளது.
புயல், மழை மற்றும் காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த ஒரு வார காலமாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. நிலைமை சீரானதை தொடர்ந்து நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடிக்க சென்ற முதல் நாளிலேயே மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications