தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் கருணாநிதி: இலங்கை அமைச்சர் வேலாயுதம் பேட்டி
சென்னை: ராஜபக்சே மீதான போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், தமிழர் பகுதியிலிருந்து உடனடியாக ராணுவம் வெளியேற்றப்பட மாட்டாது என்றும் இலங்கை அமைச்சர் வேலாயுதம் தெரிவித்தார்.
இலங்கை நாட்டின் தோட்டக்கலை மற்றும் தொழிற்சாலைத்துறை அமைச்சர் வேலாயுதம் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேற்றிரவு சந்தித்து சுமார் ஒருமணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு வேலாயுதம் அளித்த பேட்டி: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போது உள்ள அரசியல் மாற்றம் குறித்தும், அரசியல் சூழ்நிலை குறித்தும், தமிழ் மக்களின் நிலை குறித்தும் கருணாநிதியிடம் எடுத்து கூறினேன். தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் கருணாநிதி.
ராஜபக்சே மீதான போர்க் குற்றம் குறித்து இலங்கை அளவில் விசாரணை மேற்கொள்ளப்படும். முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் அவர்கள் வாழ்விடத்திற்கு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். ராணுவம் தனது கெடுபிடிகளை தளர்த்த தொடங்கியுள்ளது. ஆனால், தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை முற்றிலும் விலக்க தற்போது வாய்ப்பில்லை.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு வேலை வழங்கி வருகிறோம். அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். பாடச்சாலைகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம். மலைவாழ் தமிழர்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
உலகம் முழுவதும் இலங்கை அகதிகள் என்ற வார்த்தை இருக்க கூடாது என்று விரும்புகிறோம். எனவே மற்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும். இலங்கையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் நிம்மதியாக வாழலாம். விருப்பம் உள்ளவர்கள் வரலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து பேச இருக்கிறேன். அதற்கு நான் நேரம் கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications