தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை... கோடியக்கரை அருகே பதற்றம்!
கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
கோடியக்கரை : கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர் தமிழக மீனவர்கள். ஆறுகாட்டுத் துறையைச் சேர்ந்த 8 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கயிறை வைத்து விரட்டியடித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக மீனவர்கள் உயிருக்குப் பயந்து கரை திரும்பியுள்ளனர். கோடியக்கரை கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 மீனவர்களை இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்தனர்.
மீனவர்களிடம் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வலைகளையும், செல்போன் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை பறித்துக் கொண்டு அவர்கள் விரட்டியடித்தனர்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கைக் கடற்படையினர் வாடிக்கையாக வைத்துள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications