ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பு- நாளை விடுமுறை அறிவிப்பு! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நாளை திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூலோக வைகுண்டம் என்றும் 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 31-ந் தேதி நெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 1-ந் தேதி பகல் பத்து விழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சொர்க்கவாசல்
நாளை முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அதிகாலை 3.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூல ஸ்தானத்திலிருந்து புறப்பாடு ஆகிறார்.
அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் (பரமபதவாசல்) திறக்கப்படுகிறது. அந்த நேரத்தில் நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 4.45 மணிக்கு திருக்கொட்டகை பிரவேசம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்கு சாதரா மரியாதை நடைபெறுகிறது.

திருமாமணி ஆசான மண்டபத்தில்..
காலை 7.30 மணிக்கு திருமாமணி ஆசான மண்டபத்திற்கு நம்பெருமாள் வந்து எழுந்தருளுகிறார். 8.15 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சேவை சேவிக்கிறார்.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரையர் சேவையும், பொது ஜன சேவையும் நடைபெறுகிறது.

3 ஆயிரம் போலீசார்
இந்த விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விடுமுறை
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்துள்ளார். நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவு பிறபித்துள்ளார்.

ரகசிய கேமரா மூலம் கண்காணிப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 24 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவும் பகலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications