கழுத்தில் கருநாகத்தை அணிந்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள்.. வைரலாகும் புகைப்படம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கருநாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார்.
இந்தியாவில் உள்ள சாதுக்களும் சன்னியாசிகளும் ஆண்டுதோறும் தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும் தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கமான ஒன்றாகும்.
இந்த விரத நாட்களின் போது சன்னியாசிகள் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி விரதத்தை கடைப்பிடிப்பார்கள். அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இந்த விரதத்தை மேற்கொண்டார்.

இயற்கையான சூழல்
அவர் உத்தரப்பிரதேச மாநிலம் நைமிசாரண்யம் என்ற இயற்கை சூழல் மிகுந்த இடத்தில் தங்கியிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார். அப்போது வடமாநிலங்களில் சாதுக்களுக்கும் சன்னியாசிகளுக்கும் சாலையோரம் தங்கியிருக்கும் பாம்பாடிகள் பிடித்த பாம்பை மாலையாக அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
அந்த வகையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஜீயர் சுவாமிகளுக்கு கொடிய விஷமுள்ள கருநாக பாம்பை அணிவித்து மரியாதை செய்தனர். இதை ஏற்ற மணவாள முனிகளும் அந்த பாம்பாடிகளுக்கு அருளாசி வழங்கினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு
அதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். கோயில்களில் ஆகமவிதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. கோயில் நடைமுறைகளை மாற்றக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஜீயர் தெரிவித்திருந்தார்.

சோடா பாட்டில் வீச்சு
அது போல் கடந்த 2018ஆம் ஆண்டு வைரமுத்துவை கண்டித்து நடந்த கூட்டத்தில் பேசிய ஜீயர், ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும். சாமியார்களால் என்ன செய்துவிட முடியும் என நினைப்பவர்களுக்கு எதற்கும் தாங்கள் துணிந்தவர்கள் என்பதை காட்டுவோம். கல் எறியவும் சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும். ஆனால் அதை செய்ய மாட்டோம் என்றார். இவரது இந்த சோடா பாட்டில் பேச்சு பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications