கத்தியைக் காட்டி கருணாநிதியை மிரட்டினார் ஸ்டாலின்.. அழகிரி பரபரப்புக் குற்றச்சாட்டு!
ராமநாதபுரம்: என்னை கட்சியிலிருந்து நீக்க முடியுமா, முடியாதா என்று கேட்டு திமுக தலைவர் கருணாநிதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டினார் மு.க.ஸ்டாலின். ஒரு சினிமாப் பட வில்லன் போல அவர் நடந்து கொண்டார். இந்த மிரட்டலுக்குப் பயந்துதான் என்னை கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார் எனறு கூறியுள்ளார் மு.க.அழகிரி.
ராமநாதபுரம் வந்த மு.க.அழகிரி அங்கு பேசுகையில் இந்த புதிய பரபரப்புத் தகவலை வெளியிட்டார். இதுகுறித்து அழகிரி கூறுகையில், மதுரையில் எனது ஆதரவாளர்கள் சிலர் போஸ்டர்கள் ஒட்டியதற்குப் பின்னர்தான் பிரச்சினை வெடித்தது. எனக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் ஆத்திரமடைந்து முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்கினார் ஸ்டாலின்.

இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த பிரமுகர் மணி என்பவர் கட்சியின் சாயல்குடி நகர செயலாளர் வெங்கடேசன் மீது கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்தார். அந்த விஷயம், கருணாநிதியின் கவனத்திற்குக கொண்டு செல்லப்பட்டபோது , வெங்கடேசனின் செயல் தவறு என்று கருணாநிதியே ஒத்துக் கொண்டார். ஆனால் ஸ்டாலின் ஏற்க மறுத்தார்.
மதுரை நகர திமுக நிர்வாகிகளை கூண்டோடு நீக்கியது வரலாற்றுத் தவறாகும். எந்தக் கட்சியிலும் இப்படி நடந்ததில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின ஒரு சினிமா வில்லன் போல நடந்து கொண்டுள்ளார். என்னை கட்சியை விட்டு நீக்க முடியுமா, முடியாதா என்று கருணாநிதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். அதற்குப் பயந்தே என்னை கட்சியை விட்டு நீக்க முடிவெடுத்தார் தலைவர்.
கருணாநிக்கும், அன்பழகன் காதுக்கும் கட்சியின் எந்தப் பிரச்சினையும் போகாதபடி ஸ்டாலினும் அவரது ஆதரவுத் தலைவர்களும் தடுத்து வருகின்றனர்.
கோவையில் தலைவர் பேசியபோது இதுவே எனது கடைசித் தேர்தலாக இருக்கும் என்று பேசியுள்ளார். எனக்கு இப்போது கவலையாக உள்ளது. மொத்தக் கட்சியுமே அவரை நம்பித்தான் உள்ளது. அவர் இப்படிப் பேசியது சரியல்ல.
ஸ்டாலின் உள்பட பலரும் கட்சிக்காக பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் யாரும் கருணாநிதிக்கு சமமாகி விட முடியாது. கருணாநிதி பிறவி பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த தலைவர். எழுத்திலும் பேச்சிலும் கோடானு கோடி மக்களை ஈர்த்தவர் அவர் மட்டுமே. மற்றவர்கள் அவருக்குப் பக்கத்தில் கூட வர முடியாது என்று கூறியுள்ளார் அழகிரி.
கத்தியைக் காட்டி மிரட்டினார் ஸ்டாலின் என்று அழகிரி திடீரென கூறியிருப்பது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications