நல்ல தீர்ப்பு தரணும்: மு.க.ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த எதிர்பார்ப்பு தி.மு.க.விற்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தான். தீர்ப்பு மக்களுக்கு பயன் அளிக்கும்படியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. கர்நாடக அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், உச்சநீதிமன்ற பதிவாளரிடம் இன்று காலை 10.30 மணியளவில் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்தது தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்துகளை கணக்கீடு செய்ததில், தவறு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவினை பரிசீலித்த உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம், மனுவினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இதனையடுத்து, இந்த மனு, உச்சநீதிமன்ற விசாரணைக்காக நிலுவையில் உள்ள மனுக்களின் பட்டியலில் இணைக்கப்படும். பின்னர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து, மனுவினை ஆராய்ந்து விசாரணை நீதிபதிகள் யார் யார் என்பதை முடிவு செய்வார்.
ஸ்டாலின் வரவேற்பு
சொத்து குவிப்பு வழக்கு விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறித்து கருத்து கூறியுள்ள தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், மக்களின் எதிர்பார்ப்பின் படி ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த எதிர்பார்ப்பு தி.மு.க.விற்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தான். தீர்ப்பு மக்களுக்கு பயன் அளிக்கும்படியாக இருக்கும் என நம்புகிறேன் என்று கூறினார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து
இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், இளங்கோவன் வரவேற்றுள்ளார். விடுதலையை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் காலநிர்ணயம் செய்து தீர்ப்பு தரவேண்டும் என்று கூறியுள்ளார். தலைமை நீதிபதி தத்து மீது புகாரிருப்பதால் ஜெயலலிதா வழக்கில் அவரது தலையீடு இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications