மேயர் சைதை துரைசாமி மீது ஸ்டாலின் அவதூறு வழக்கு

Subscribe to Oneindia Tamil

Saidai duraisamy and Stalin
சென்னை: உண்மைக்குப் புறம்பாக மாநகராட்சிக் கூட்டத்தில் தகவல்களை வெளியிட்டதாக சென்னை மேயர் சைதை துரைசாமி மீது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மேயர் ம.சுப்ரமணியன் ஆகியோர் சார்பில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றபோது பேசிய மேயர் சைதை துரைசாமி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேயராக பொறுப்பில் இருந்தபோது, ரூ.292.31 கோடி நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், பின்னர், ம.சுப்ரமணியன் மேயர் பொறுப்பு வகித்த போது, ரூ.125 கோடி நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், தணிக்கைத் துறை தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.

இது உண்மைக்குப் புறம்பான தகவல் என்று மு.க.ஸ்டாலினும், ம.சுப்ரமணியமணியமும் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போதைய சென்னை மேயர் சைதை துரைசாமிக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 22 ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+