பென்னிகுயிக் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின்
தேனி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று கூடலூர் அருகே உள்ள பென்னிகுயிக் நினைவிடத்திற்குச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
லோயர் கேம்ப் பகுதியில் பென்னிகுயிக் நினைவிடம் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிக்குயிக் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நினைவிடத்திற்கு இன்று மு.க.ஸ்டாலின் வந்தார். சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பென்னிகுயிக்குக்கு மரியாதை செலுத்தியது, மகிழ்ச்சியளிக்கிறது. முல்லைபெரியார் அணை தொடர்பாக வந்த உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு திராவிட முன்னேற்ற கழகம்தான் காரணம். ஆனால் ஒரு சில கட்சிகள் நாங்கள்தான் முல்லை பெரியார் அணை பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வருவதுபோல் பேசி வருகின்றன.
தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில் உரிமைகளை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி நேரில் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி வரும் நிலையில் இவர் மட்டும் கடிதம் எழுதி வருகிறார். தமிழக உரிமைகளுக்காக போராட வேண்டிய அரசு எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது என்றார் ஸ்டாலின்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications