சி்றப்பாக செயல்படாவிட்டால் பதவியைப் பிடுங்கி விடுவோம் - ஸ்டாலின் எச்சரிக்கை
தென்காசி: இளைஞர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யாவிட்டால் அவர்களிடம் ஓப்படைக்கப்பட்டிருக்கும் பணி உடனடியாகப் பறிக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட இளைஞரணி சார்பில் கட்சி செயல்பாடு தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது. ஆய்வுப் பணியை திமுக பொருளாளர் முக ஸ்டாலின் மேற்கொண்டார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், சில இளைஞரணி அமைப்புகளின் கட்சி பணிகள் எனக்கு திருப்தி தரும் வகையில் இல்லை. இந்த நிர்வாகிகளுடன் இது முதல் ஆலோசனை மற்றும் ஆய்வு என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டும் இது போன்ற ஆய்வு கூட்டத்தில் இளைஞரணி பணிகள் திருப்தி இல்லை என தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் கட்சி பணிகள் உடனடியாக தலைமையின் உத்தரவுப்படி பறிக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்தார்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ரசாக், திமுக பொருளாளர் சேக் தவூது, செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், கடையநல்லூர் நகராட்சி தலைவி சைபுன்னிசா, மாவட்ட பிரதிநிதி கருப்பன் நாயக்கர், ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரவியம், செங்கோட்டை லிங்கராஜ், தென்காசி நகர செயலாளர் ஆயன் நடராஜன், அசன், சூசைரத்தினம், வல்லம் திவான் ஓலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு தி்முக பொருளாளர் ஸ்டாலின் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்ததால் அவர்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர். இங்கேயும் அடுத்த ஆண்டு களையெடுப்பு தொடரும் என்று தெரிகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்!












Click it and Unblock the Notifications