Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்பரம்பாக்கம் நீர் திறப்பு: மடியில் கனமில்லை என்றால் நீதி விசாரணைக்கு உத்தரவிடுக - ஜி.ராமகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து முதல்வர் ஜெயலலிதா சொல்வது உண்மை என்றால் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் துயரத்திலிருந்தும், சோகத்திலிருந்தும், பயத்திலிருந்தும் மீளாத நிலையில் அதைப்பற்றி எள்ளளவும் கவலைப்படாத அதிமுக, நகர் முழுவதும் தோரணம் கட்டி கட் அவுட்கள் வைத்து விழா போல கொண்டாடி இருக்கிறது. அரசின் கணக்குப்படியே கூட 470 பேருக்கு மேல் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர்.

statement issed by CPI G.ramakrishnan for demanding judicial enquiry in chembarambakkam lake water released

உடமைகளும், வீடுகளும் இழந்தோரின் எண்ணிக்கையும் துயர நிலையும் முற்றிலும் மாறாத நிலை உள்ளது. வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் தன்னுடைய பேச்சில் ஒரு வார்த்தைக்காகக் கூட உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவோ, இரங்கல் தெரிவிக்கவோ முன்வரவில்லை.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உரிய காலத்தில் உபரி நீர் திறந்து விடப்படாததும், திடீரென்று உபரி நீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதும் தான் சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பிற்கு அடிப்படையான காரணம். இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டியவர் தமிழக முதல்வர் என்பதால் இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், முதலமைச்சர் பதவி விலக வேண்டுமெனவும் மக்கள் நல கூட்டணியின் சார்பில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளை கேலி பேசுவதன் மூலம் அரசின் தோல்விகளை மூடி மறைத்திடவும், தவறுகளிலிருந்து தப்பிக்கும் நோக்கில் முதல்வர் முயற்சித்துள்ளார். ஏற்பட்ட உயிரிழப்பும், இழந்த உடைமைகளும், இப்போதும் நீங்காத துயரமும் முதலமைச்சரின் உண்மைக்கு மாறான அவரது உரையைத் தாண்டி தமிழக அரசின் அதிகாரக்குவிப்பு, அலட்சியப்போக்கு செயலற்ற தன்மை ஆகியவற்றை பறைசாற்றி நிற்கிறது.

மக்களின் துயரங்கள் குறித்த அதிமுக மற்றும் முதலமைச்சரின் அலட்சியப்போக்கு, கண்டு கொள்ளாமை, உணர்திறனற்ற தன்மை ஆகியவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இனியொரு துயரம் இதே காரணத்திற்காக நிகழாது இருப்பதற்கும், இப்போதைய துயரத்திற்கு காரணமானவர்களை கண்டு பிடித்து தண்டிப்பதற்கும் நீதி விசாரணை வேண்டுமென்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் முன்வைக்கிறது.

அதிமுக அரசுக்கும் முதலமைச்சருக்கும் "மடியில் கனமில்லை என்றால் நீதி விசாரணை நடத்த எவ்வித தயக்கமும் இருக்கத் தேவையில்லை". எனவே, தமிழக முதலமைச்சர் சொல்வது உண்மையானால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணக்கு உத்தரவிட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+