செந்தில் பாலாஜி உறவினர்கள் பண மோசடி: பணம் போனது யாருக்கு.. கண்டுபிடிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கோபி என்பவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களான அசோகன், கார்த்தி ஆகியோர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்த போலீசார், இதே புகாரை 81 பேர் அளித்துள்ளதாகவும், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மீதான புகாரில் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டுமே போலீசார் விசாரிப்பதாக புகார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘இந்த வழக்கில் போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும். மேலும், வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் யாருக்கு சென்றது என்பதை கண்டிறிய மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் தீவிர விசாரணை நடத்தவும், அதனை துணை ஆணையர் கண்காணிக்க வேண்டும்' என உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications