மாதிரி போர் விமானங்களை ஏவிய மாணவர்கள்.. சேலத்தை கலக்கிய இளம் விஞ்ஞானிகள்!
சேலம்: தேசிய அறிவியல் தினத்தை வரவேற்கும் விதமாக சேலத்தில் நடைபெற்ற விழாவில் மாணவ மாணவியர் கலந்து கொண்டு மாதிரி போர் விமானங்களையும், ராக்கெட்களையும் ஏவி, பறக்க விட்டு சாதனை படைத்தனர்.
பிப்ரவரி 28ம் தேதி ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதை வரவேற்கும் விதமாக சேலத்தில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் மாணவ, மாணவியர் கலந்து கொண்ட ஒரு சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

ராக்கெட் வடிவில் அமர்ந்து
இதில் 6500 மாணவ மாணவியர் கலந்து கொண்டு ராக்கெட் வடிவில் அமர்ந்து அசத்தினர். இது ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக நடத்தப்பட்டது.

மாணவர்கள் ஏவிய ராக்கெட்டுகள்
இந்த நிகழ்ச்சியின்போது போர் விமானங்கள், மாதிரி ராக்கெட்டுகள் ஆகியவை பறக்க மற்றும் ஏவப்பட்டன. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் மாணவர்கள் தயாரித்தவை இவை.

ஆணையர் சங்கர் வாழ்த்து
நிகழ்ச்சியில் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் ஸ்ரீமதி கேசன், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் வெறும் படிப்போடு நில்லாமல் அறிவியல் அறிவையும் விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்று காவல்துறை ஆணையர் சங்கர் வலியுறுத்தினார்.

ஊக்கம் தரும் ஸ்ரீமதி
ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் ஸ்ரீமதி கேசன் இளம் மாணவர்களின் அறிவியல் திறமையைக் கண்டறிந்து அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம்தான், மாணவர்களால் தயாரிக்கப்பட்ட கலாம் சாட் செயற்கைக் கோளை தயாரித்து விண்ணில் செலுத்தி அசத்தியது என்பது நினைவிருக்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications