சென்னை சூப்பர் கிங்ஸ் விவகாரம்: பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனுடன் சு.சுவாமி சந்திப்பு
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடையை நீக்கக் கோரும் வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசனை பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி இன்று சென்னையில் சந்தித்து பேசினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கியதற்காக 2 ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான சீனிவாசனை சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் திடீரென சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.சுவாமி, சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சதித் திட்டம் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டோணியையும் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். இதனிடையே சென்னை போட்கிளப்பில் இன்று சீனிவாசனை மீண்டும் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தார்.
இச்சந்திப்பின் போதும் சென்னை சூப்பர் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்க்கும் வழக்கு தொடர்பாக இருவரும் ஆலோசித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications