சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் யாரும் உருப்பட முடியாது... சு.சாமி அதிரடி!
சினிமாவில் இருந்த அரசியலுக்கு வரும் யாரும் உருப்பட முடியாது, அவர்களால் தமிழகத்திற்கு ஒன்றும் நடக்காது என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : சினிமாவில் இருந்த அரசியலுக்கு வரும் யாரும் உருப்பட முடியாது, அவர்களால் தமிழகத்திற்கு ஒன்றும் நடக்காது என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : 2ஜி வழக்கில் ராஜா தண்டனை பெறுவது உறுதி. 2009ல் அலைக்கற்றையின் விலை 10 மடங்கு அதிகம், அரசு எவ்வளவு விலைக்கு அவற்றை ஒதுக்கீடு செய்ததோ, அதைவிட 8 மடங்கு அதிக விலைக்கு ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்றுள்ளன.

இதன் அர்த்தம் என்னவென்றால் நிச்சயமாக நாட்டுக்கு இழப்பு நடந்துள்ளது. சில சமயங்களில் இது போன்ற தீர்ப்ப்புகள் வரும். நானும் உச்சநீதிமன்றத்தில் தோற்கும் முன்னர் உயர்நீதிமன்றத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறேன், மேல்முறையீட்டில் தான் ஜெயித்தேன்.
அது போல 2ஜி வழக்கிலும் 10 நாட்களில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மேல்முறையீட்டில் நிச்சயம் ஆ.ராசாவிற்கு தண்டனை கிடைக்கும்.
ஜெயலலிதா மரணம் எப்போது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு ஒரே ஒரு ஆதாரம் டாக்டர் பி.சி.ரெட்டி தான் அவர் சொல்வதை நான் ஏற்கிறேன், ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரெட்டி கூறுகிறார், அவர் நம்பகமானவர் அதனால் எனக்கு ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி உயிரிழந்தாரா, 5ம் தேதி உயிரிழந்தாரா என்பதில் சந்தேகம் இல்லை. அதே போல ஜெயலலிதா ஐஸ்கிரீம் சாப்பிட்டாரோ, லஸ்ஸி குடிச்சாரோ என்று சொல்வதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை.
வைரமுத்து ஆண்டாளைப் பற்றி ஒரு புத்தகத்தில் இருந்து குறிப்பு எடுத்ததாக சொல்கிறார். ஆனால் அந்த புத்தகத்தில் அப்படி இல்லையே, வைரமுத்து ஒரு பெண் தெய்வத்தை இப்படி கூறியது மிகப்பெரிய தவறு இதற்கான தண்டனையை அந்த ஆண்டவனே வழங்குவார்.
ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்கிறார் ஆனால் அவர் எங்கே வந்தார். அவருடைய திட்டங்கள் எல்லாமே தோல்வி தான். கமல் வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும். சினிமாவில் இருந்து வரும் யாரும் இங்கு உருப்பட முடியாது, தமிழகத்தில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சுப்ரமணியன் சாமி கூறினார்.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி











Click it and Unblock the Notifications