நாளைக்கும் மழை வராமலா போய்ரும்... 'பெருத்த' எதிர்பார்ப்போடு பள்ளிச் சிறார்கள்!
சென்னை அடுத்த 24 மணிநேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தைத் தொடர்ந்து அரசு இன்று 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளை மூட உத்தரவிட்டது.
ஆனால் தற்போது மழை இல்லை. மாறாக வெயிலும் வந்து எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.

எப்பவுமே இப்படி்ததான்
எப்பவுமே இப்படித்தான் பாஸ் என்று வடிவேலு படத்தில் ஒரு வசனம் வரும். அது நம்ம ஊர் மழைக்கும், அதை கணித்துக் கூறும் வானிலை ஆய்வு மையத்திற்கும், பள்ளிகள் விடுமுறைக்கும் ரொம்பப் பொருத்தமாக இருக்கும்.

மழை பெய்யும்.. ஸ்கூல் இருக்கும்
அதாவது நல்ல அடை மழை பெய்து கொண்டிருக்கும். ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடாமல் விடாப்பிடியாக வைத்து மாணவச் செல்வங்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்வார்கள்.

ஸ்கூல் இருக்காது.. மழையும் பெய்யாது
சில நேரங்களில் இன்று கனத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்திருக்கும்.. உடனே பள்ளிகளுக்கு விடுமுறைவிட்டிருப்பார்கள். ஆனால் அன்று பார்த்து சூரிய பகவான் சூப்பராக சிரித்துக் கொண்டிருப்பார்கள். புள்ளக எல்லாம் விளையாடி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.. தேங்க்ஸ் சன் சார் என்று சொல்லியபடி.

பள்ளிச்சிறார்கள் குஷி
இன்றும் அதே கதைதான் நடந்துள்ளது. நேற்று பெய்த விடாப்பிடியான மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விட்டார்கள். மழையும் நன்றாகவே பெய்தது.. பள்ளிச் சிறார்களும், பிஸ்கட் பிளஸ் டிவியும் கையுமாக உட்கார்ந்து விடுமுறையை அனுபவித்தனர்.

நாளைக்கும் லீவா
மாலை வந்ததும், வழக்கமாக பார்க்கும் மியூசிக் சானல்கள், கார்ட்டூன் சானல்களை படார் படாரென ஆப் செய்து விட்டு, கையில் இருந்த 'மேரி'யையும் வாயில் இருந்த 'பிஸ்கெட்'டையும் அப்படியே ஃபிரீஸ் செய்து விட்டு, சன் நியூஸ் பக்கம் போனார்கள்.. அடடா செய்தி பார்க்கும் அளவுக்கு புள்ளைக்கு தெளிவு வந்திருச்சே என்று பெற்ற வயிறு குளிர்ந்து போனபோது, இருப்பா... நாளைக்கு லீவான்னு தெரிஞ்சுக்கனும்ல அதுக்குத்தான்... என்று சொல்லி நம்மை டபாய்த்தனர்.

அம்மாவுக்கு நன்றி...
வரும் 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று ரமணன் சார் சொல்லி முடித்தபோது வாயில் இருந்த பி்ஸ்கட்டையும் மீறி பல்லாக மாறியது பயபுள்ளகளின் சிரிப்பு... அடுத்து சில நிமிடங்களில் தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக ஸ்கிரோல் போட்டதும்தான் தாமதம்.. அம்மான்னா அம்மாதாய்யா என்று உற்சாகக் கூச்சலிட்டபடி அடுத்த நொடியே சானலை மாற்றி நம்மை ஏகத்துக்கும் டென்ஷனாக்கினார்கள்.

நாளைக்குப் பார்த்துக்குவோம்
சரி லீவு விட்டா என்ன, நாளைக்கு வரப் போற பரீட்சைக்குப் படிக்கலாம்ல என்று பொறுப்பாக நாம் கேட்டால் அதெல்லாம் ஏற்கனவே படிச்சுட்டாங்கே.. அப்படியே போனாலும் நாளைககும் மழை வராமலா போய்ரும் என்று தெனாவட்டாக பதில் வேறு கொடுக்கின்றனர்.

பகலில் வெயில்...
ஆனால் இன்று பாருங்க.. காலை 10 மணி வரைக்கும் லேசான தூறல் காணப்பட்டது. அதன் பிறகு மழையைக் காணோம். இப்ப நல்ல வெயில் அடிக்குது. மாலையில் மழை வரலாம். இரவில் வெளுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியோ பெரியவர்களுக்கு 'குவார்ட்டர்' மகிழ்ச்சி தரும்.. பி்ள்ளைகளுக்கோ 'குவார்ட்டர்லி' பரீட்சை லேட்டானா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...!!
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications