பூத்து பூத்து குலுங்குதடி பூ! சூரியகாந்தி பூவு! செல்ஃபிக்கு ரூ 25! ஆயக்குடியில் குவியும் மக்கள்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஆயக்குடியில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வந்து பார்வையிடுகிறார்கள். மேலும் இந்த சூரியகாந்தி பூக்களுடன் நின்று செல்பி எடுக்க ரூ 25 வசூலிக்கப்படுகிறது.
சன் பிஃளவர் எனப்படும் சூரியகாந்தி பூக்களை தென்காசி மாவட்டத்தில் ஆயக்குடி முதல் வடகரை வரை செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வயல்வெளிகளில் ஆண்டுதோறும் விவசாயிகள் பயிரிடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டுள்ளனர். அது தற்போது பூத்து குலுங்குகிறது. இது பார்ப்பதற்கு மஞ்சள் போர்வை போர்த்தியது போல் மிகவும் அழகாக இருக்கிறது. இந்த பூக்களை காண உள்ளூர் சுற்றுலா பயணிகளை விட அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர்களும் வருகை தருகிறார்கள்.
அது போல் தென்காசியில் உள்ள குற்றால அருவிகள், காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்டவைகளை பார்வையிட வரும் போது சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்த அழகை பார்க்க ஆயக்குடி அருகே உள்ள கம்பளி பகுதியில் சுற்றுலா பயணிகள் முற்றுகையிடுகிறார்கள்.
கேரளாவிலிருந்து தென்காசிக்கு வருவோர் கார்களை நிறுத்திவிட்டு வயல்களில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி மலர்களை ரசிப்பதற்கு செல்லும் போது அவர்களிடம் வயல் உரிமையாளர்கள் செல்பி எடுக்க ஒருவருக்கு ரூ 25 வசூல் செய்கிறார்கள். பணம் செலுத்தி உள்ளே செல்லும் மக்கள் சூரியகாந்தி மலர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த பூக்களை கண்டால் செல்வம் பெருகுமாம்.
கேரளத்தை சேர்ந்த புதுமணத் தம்பதிகளும் இங்கு வந்து சூரியகாந்தி மலர்களை பார்த்துவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த நெடுஞ்சாலையில் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications