சுவாதியின் தந்தை கூறிய அந்த வார்த்தை என்னை உலுக்கியது.. ஸ்டாலின் உருக்கம்!
சென்னை: படுகொலை செய்யப்பட்ட இன்போசிஸ் ஊழியர் சுவாதியின் தந்தை தன்னிடம் விடுத்த கோரிக்கை தன்னை உலுக்கிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, ஒரு வாலிபரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சூளைமேட்டிலுள்ள சுவாதியின் வீட்டுக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று சென்று அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

ஆறுதல் கூறிய ஸ்டாலின்
அப்போது, சுவாதியின் தந்தை மட்டுமின்றி, அவரது நெருங்கிய உறவினர்களும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் பேசி ஆறுதல் கூறினார் ஸ்டாலின்.

பேட்டி
இதன்பிறகு வீட்டுக்கு வெளியே, ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஜெயலலிதா கூறியதை சுட்டிக்காட்டி, அது தவறான தகவல் என்றார்.

பட்டியல்
சென்னையில் சமீபகாலமாக நடைபெற்ற கொலை குற்றங்களை ஸ்டாலின் வரிசையாக பட்டியலிட்டு படித்தார். நிலைமை இப்படி இருக்கும்போது, தமிழக அரசு இனியாவது விரைந்து குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உலுக்கிய கோரிக்கை
மேலும், சுவாதியின் தந்தை, சந்தான கோபாலகிருஷ்ணன் தன்னிடம் ஒரு வேண்டுகோள்விடுத்ததாகவும், அது தனது மனதை உலுக்கியதாகவும் ஸ்டாலின், நிருபர்களிடம் கூறினார்.

யாருக்கும் நடக்க கூடாது
சுவாதியின் தந்தைக்கு, அவரது மகளுக்கு நேர்ந்த கொடூரம் பற்றி ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், இனிமேல் இப்படி யார் ஒருவருக்கும் நடக்க கூடாது என்பதை என்னிடம், வலியுறுத்தி கூறினார். அவரது அந்த பெருந்தன்மை எனது மனதை உலுக்கி விட்டது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications