பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 50 பேர் மரணம்: பலி எண்ணிக்கை 1239 ஆக உயர்வு
சென்னை: நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 50 பேர் மரணமடைந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,289 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,000-த்துக்கும் அதிகமாகி உள்ளது.

நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு அறிகுறிகளுடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சக அறிக்கையின்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 1,289 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் பெண் பலி
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் கடந்த ஒரு வாரகாலமாக யாராவது ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர். இன்று சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானதால் பீதி அதிகரித்துள்ளது.
சேலம் மேட்டு மக்கான் தெருவை சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா. இவரது மனைவி சம்சாத் பேகம் (60). இவர்களது மகன் முகமது ரபி துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். பின்னர் மீண்டும் கடந்த வாரம் துபாய்க்கு திரும்பினார். அவரை வழியனுப்ப சம்சாத் பேகம் மற்றும் உறவினர்கள் சிலர் சென்னைக்கு சென்றனர்.
சென்னையில் இருந்து திரும்பிய சம்சாத் பேகத்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்தனர். இதில் சம்சாத் பேகத்துக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து தனி வார்டில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து சென்னைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அப்போது சில கிலோ மீட்டர் தூரத்திலேயே அவரது நிலைமை கவலைக்கிடமானது.
இதையடுத்து அவசர அவசரமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு 11.45 மணியளவில் கொண்டு வந்தனர். அப்போது புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் ஆம்புலன்சுக்கு வந்து சம்சாத் பேகத்தை பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் டாக்டர்கள், சாம்சாத் பேகத்தின் உறவினர்கள் கொண்டு வந்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை பார்த்தனர். அப்போது சம்சாத் பேகம் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு பலியானது தெரியவந்தது. இதையடுத்து உடனடியே அவரது உடலை எடுத்து சொல்ல அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து உடல் கொண்டு செல்லப்பட்டது.
சேலம் மாநகரில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications