தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு- நவி மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு தமிழ்த்தாய் விருது
சென்னை : 2014 மற்றும் 2015ம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு விருதுகள் பெறுபவர்களின் விபரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 2014-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான நவி மும்பை தமிழ்ச்சங்கத்திற்கும், சொல்லின் செல்வர் விருது டாக்டர் சுதா சேசையனுக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் புத்தாண்டு
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி. இத்தகைய பழமையுடைய, இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியைப் பேசுபவர்கள் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக மரபுவழி பெருமை படைத்த சித்திரை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அரசால் அறிவிக்கப்பட்டு, 2012-ம் ஆண்டு முதல் அந்நாள் அரசு விழாவாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழுக்கு தொண்டாற்றும் தமிழறிஞர்களுக்கும் தமிழ் வளர்க்கும் சிறந்த அமைப்பிற்கும் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகளும் தங்கப்பதக்கங்களும் வழங்குவதென அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
2014-ம் ஆண்டு விருதுகள்
2014-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான நவி மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத்தொகையாக ரூபாய் 5 லட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். 2014-ம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கபிலர் விருது-
அ.லலிதா சுந்தரம்.
உ.வே.சா. விருது-
மருது அழகு ராஜ்
கம்பர் விருது-
செ.வை.சண்முகம்
சொல்லின்செல்வர் விருது-
டாக்டர் சுதா சேசையன்
ஜி.யு.போப் விருது-
ஜெ. நாராயணசாமி
உமறுப்புலவர் விருது-
சே.மு. முகம்மதலி
இத்துடன் 2013-ம் ஆண்டின் முதலமைச்சர் கணினித்தமிழ் விருதுக்கு ந.தெய்வசுந்தரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
கவிஞர் பிறைசூடனுக்கு விருது
2015-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 லட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் 2015-ம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கபிலர் விருது- கவிஞர் பிறைசூடன்
உ.வே.சா. விருது-குடவாயில் பாலசுப்பிரமணியன்
கம்பர் விருது-கோ.செல்வம்
சொல்லின் செல்வர் விருது- சோ.சத்தியசீலன்
ஜி.யு.போப் விருது-மதுரை இளங்கவின் (எம்.ஆரோக்கியசாமி)
உமறுப்புலவர் விருது-மு.சாய்பு மரைக்காயர்
இளங்கோவடிகள் விருது- நிர்மலா மோகன்
தங்கப்பதக்கம்
2014-ம் ஆண்டின் முதலமைச்சர் கணினித்தமிழ் விருதுக்கு விருபா வளர்தமிழ் நிகண்டு குமரேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மேற்காண் விருதுகள் அனைத்தும் அரசால் பின்னர் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications