திருநங்கை போல் வேடமிட்டு போராட்டம்... சித்தூர் எம்.பி. மீது ‘தமன்னா’ போலீசில் புகார்
திருநங்கைகளை அவமதித்ததாக சித்தூர் எம்.பி. மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆந்திர மாநிலம் சித்தூர் எம்.பி. சிவபிரசாத் மீது திருநங்கைகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சிவபிரசாத். தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி.யான இவர், மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் ஹிட்லர், கிறிஸ்துமஸ் தாத்தா, அம்பேத்கர், பெண் வேடம், ஆஞ்சநேயர், பள்ளி மாணவர், சலவைத் தொழிலாளி, பாஞ்சாலி, முஸ்லிம் வேடம், ஸ்வச்பாரத் சேவகர் என பல்வேறு வேடங்களில் ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திற்கு வந்து, ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் இரு தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திருநங்கை போல் வேடமிட்டு போராட்டம் நடத்தினார். இவரது இந்த செயலுக்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விஜயவாடா திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவி தமன்னா சிம்மாத்திரி, சித்தூர் எம்.பி. சிவபிரசாத் மீது கவர்னர்பேட்டை காவல் நிலையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், திருநங்கைகள் மனம் புண்படும்படி சிவபிரசாத் நடந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட எம்.பி. சிவபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமன்னா கேட்டுக்கொண்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications