நாய், கோழிகளும் உசுருதானேய்யா.... வெள்ளத்திலும் மனிதநேயம் காத்த சென்னை மக்கள்
சென்னை: கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையிலும், சென்னை புறநகரில் வசிப்பவர்கள் தங்களின் செல்லப்பிராணிகளான நாய்கள், கோழிகளின் உயிரைக்காக்க ஏராளமானோர் போரடியதை கண்கூடாக காண முடிந்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலையால் வடமாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கொட்டிய கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்து தண்ணீர் தேசங்களாக மாறியுள்ளன.
ஏரிகள் நிரம்பி உடைந்து வெள்ளநீர் வெளியேறி வருவதால் தென்சென்னை பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன. புறநகர் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் தரைத்தளம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சிலரது வீடுகளிலோ முதல்தளம் வரைக்கும் தண்ணீர் எட்டிப்பார்க்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலமும் , ஹெலிகாப்டர் மூலமும் மீட்டு வருகின்றனர்.

தாம்பரத்தில் மீட்பு
சென்னை தாம்பரம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியிருந்த 600 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு குழுவினர் கூறினர்.

செல்லப்பிராணிகள்
வெள்ளத்தில் உடமைகளை இழந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தவித்து வரும் நிலையிலும் செல்லப்பிராணிகளையும் உடன் வைத்துக்கொண்டு மீட்க யாராவது வருவார்களா என்று காத்திருந்தவர்களுக்கு கடவுளாய் வந்து மீட்டனர் மீட்புப்பணியினர்.

எல்லாமே உசுருதானேய்யா
ஆசை ஆசையாய் வளர்த்த நாய்களும், கோழிகளும் வெள்ளத்தில் தப்பிப் பிழைத்து தங்களுடனேயே இருக்க... படகுகளில் அவைகளை இறக்கிவிட்டு பின்னர் தாங்கள் இறங்கினர்.
குறுகலான பகுதியில் உள்ளவர்களை பல சிரமங்களுக்கு மத்தியில் மீட்டு வரும் நிலையில், செல்லப்பிராணிகளையும் போரடி சிலர் மீட்டனர். முடிச்சூர், பாரதி நகர் பகுதி சாலையோரங்களில் புதர் மண்டி இருப்பதால், மீட்புப் படையினர் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

நெகிழ்ச்சியான செயல்
முடிச்சூர் பகுதிகளில் 25 வீரர்கள் கொண்ட குழுக்களாக பிரிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கினாலும், உடமைகளை பறிகொடுத்தாலும், உணவு இன்றி தவித்த நிலையிலும் ஏராளமானோர் மனிதாபிமானத்துடன் தாங்கள் வளர்த்த செல்லப்பிராணிகளையும் வெள்ளத்தில் பத்திரமாக மீட்டது காண்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications