காரைக்குடியில் தமிழ் அமைப்புகள் நடத்திய தமிழ்விழா
காரைக்குடி: காரைக்குடியில் அன்னைத் தமிழுக்காக அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து தமிழ் விழா நடத்தின.
காரைக்குடி கம்பன் மணி மண்டபம் தமிழ்த் தாய்க் கோயில் வளாகத்தில் தமிழ்ப் பணியாற்றும் இலக்கிய அமைப்புக்களான குறட்கழகம், அண்ணா தமிழ்க்கழகம், கலைஞர் தமிழ்ச்சங்கம், மாவட்ட எழுத்தாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ் விழா, புலவர் முனைவர் ப.நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், குறட் கழகத் தலைவர் நா.மெய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேசுகையில்,
நட்சத்திரங்களெல்லாம் ஒன்றாகக் கூடி நிலாவுக்கு விழா எடுப்பதைப் போல, நதிகளெல்லாம் ஒன்றாகக் கூடி கடலுக்கு விழா எடுப்பதைப் போல, நெற்கதிர்களெல்லாம் ஒன்றாகக் கூடி நீர்தரும் மேகத்திற்கு விழா எடுப்பதைப் போல, குத்துவிளக்குகள் எல்லாம் ஒன்றாகக்கூடி கோபுர தீபத்திற்கு விழா எடுப்பதைப் போல, செந்தூரப் பூக்களெல்லாம் ஒன்றாகக் கூடி தென்றலுக்கு விழா எடுப்பதைப் போல, தமிழ் உள்ளங்களெல்லாம், தமிழ் நெடுஞ்சங்களெல்லாம் ஒன்றாகக் கூடி அன்னைத் தமிழுக்கு இன்றைக்கு தமிழ் விழா எடுத்துள்ளோம்.
உலகத்திலேயே மிகத் தொன்மையான நாடு தமிழ் நாடுதான். அதற்கு சாட்சியாக இருந்தது லெமூர்யா கண்டம். உலகத்திலேயே மிகத் தொன்மையான மக்கள் தமிழ் மக்கள் தான்.
அதற்கு சாட்சியாகச் சொன்னால் கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி என்பர் அதைப் போல தொன்மையான இசை தமிழ் இசை தான், தொன் மையான இசை தமிழிசை தான். தொன்மையான மொழி தமிழ் தான் என பெருமையாக குறிப்பிட்டார்.
மேலும், இந்த விழாவில், பாரதி பாடிய மூவர் எனும் தலைப்பில் கம்பரைப் பற்றி பேராசிரியர் எல்.கே.சுபாஷ் சந்திர போஸ், வள்ளுவரைப் பற்றி பேராசிரியர் தே. இராஜாராம், இளங்கோ வைப் பற்றி முனைவர் இராம.சௌந்திரவள்ளி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications