திரும்பிப் போ.. கீழடி ஆய்வை தடுத்து நிறுத்திய மத்திய அமைச்சர்களுக்கு எதிர்ப்பு.. சிவகங்கையில் பதற்றம
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடும் எதிர்ப்பை பொதுமக்களும் மக்கள்தேசம் அமைப்பினர் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம
மதுரை: கீழடியில் நடைபெற்ற அகழாய்வை பாதியில் நிறுத்தியதற்கும், அதன் தலைவராக பணியாற்றிய அமர்நாத்தை அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து மக்கள் தேசம் அமைப்பினர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.

பாதியில் நிறுத்தம்
இந்நிலையில், மத்திய அரசு இந்த ஆராய்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது. இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்த்தனர்.

3ம் கட்ட ஆய்வு
இதனிடையே, மதுரை அருகே கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரீகத்தை வெளிக் கொண்டு வந்த புகழ்மிக்க பணியின் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் 3ம் கட்ட ஆய்விற்கான நிதி கேட்டு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார்.

இடமாற்றம்
இந்நிலையில், கீழடி தொல்லியல் ஆய்வுகளுக்கு தலைமையேற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மத்திய அரசு தனது புதிய கொள்கை முடிவுகளைக் காரணம் காட்டி இந்த பணியிட மாற்றத்தை நிகழ்த்தியது.

ஆய்வில் தொய்வு
அதிகாரியின் அதிரடி மாற்றத்தால் கீழடி அகழ்வாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று பிரியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பு
இந்நிலையில், கீழடியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வந்தனர். அவர்களை அந்த இடத்திற்கு நுழைய விடாமல் தமிழ் தேசம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகராறு
இதனால் பாஜகவினருக்கும், பொதுமக்களுக்கும், தமிழ் தேசம் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு தகராறு ஏற்பட்டது. இதனால் ஒரு பதற்றமான சூழல் அங்கு உருவானது.

திரும்பிப் போ
தமிழ் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கு எதிராக செயல்படும் மத்திய அமைச்சர்களே திரும்பிப் போங்கள் என்று எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் கீழடியை பார்க்க முடியாமல் மத்திய அமைச்சர்களும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் திரும்பினார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications