முண்டேவுக்கு பதிலாக மகாராஷ்டிரா முதல்வரின் படம் போட்டு அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தமிழ்நாடு பாஜக
காஞ்சிபுரம்: மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு பதிலாக மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவானின் படம் போட்ட அஞ்சலி போஸ்டர்களை ஒட்டிய பாஜகவினரால் காஞ்சிபுரம் நகரமே அல்லோகலப்பட்டுவிட்டது.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். நாடு முழுவதும் அவரது மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நகர பாஜகவினர் சார்பில் அஞ்சலி, போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதில் அதிர்ச்சி என்னவென்றால், இந்த போஸ்டர்களில் மரணமடைந்த கோபிநாத் முண்டேவின் படத்திற்கு பதிலாக மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவானின் படம் இடம்பெற்றிருந்தது.
இதைப்பார்த்த பொதுமக்களில் சிலர் அதிர்ச்சியடைந்து, பாஜகவினரிடம் தகவல் அளித்தனர். இதையறிந்த பாஜகவினர், தவறை உணர்ந்து, நகர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக கிழித்தெறிந்தனர். இதன்பிறகு புகைப்படம் இல்லாமலேயே மீண்டும் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இது குறித்து பாஜ நிர்வாகிகள் கூறுகையில், உருவ ஒற்றுமையில் மறைந்த அமைச்சரும் மகாராஷ்டிர முதல்வரும் ஒரே மாதிரி இருந்ததால் அச்சக ஊழியர்கள் தவறுதலாக முதல்வரது படத்தை இடம்பெறச் செய்துவிட்டனர். இதில் உள்நோக்கமில்லை. தவறுக்கு மிகவும் வருந்துகிறோம் என்று கூறினர். திராவிட கட்சி நிர்வாகிகள் போஸ்டர் அடிப்பதிலும், கட்-அவுட் அடிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள். அடுத்த 'ஜனாதிபதி வாழ்க' என்கிற அளவுக்கு அதிபயங்கரமாக யோசித்து போஸ்டர் அடிப்பார்கள். ஆனால் தமிழக பாஜக இதில் குழந்தை என்பதை நிரூபித்துவிட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கை துவங்கும்முன்பே காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றதாக அக்கட்சி பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது பாஜக போஸ்டரை வைத்து களேபரம் செய்துள்ளது. என்னே இந்த காஞ்சி போஸ்டர்களுக்கு வந்த சோதனை?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications