For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புயல் பாதிப்புக்கு ரூ.1,000 கோடி நிவாரண நிதி வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ் கடிதம்

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயல் பாதித்த பகுதிகளில் உடனடி நிவாரண பணிகளுக்காக மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

வர்தா புயல் தாக்கியதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அதிகாரிகள் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு முழுமை பெற 3 நாட்கள் ஆகும். ஆய்வுக்கு பின்னர், முழுமையான சேத விவரம் விரிவான அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கு அளிக்கப்படும்.

Tamil Nadu Chief Minister writes to PM, seeks Rs 1000 crore assistance

அதற்கு முன்னதாக, புயல் பாதித்த பகுதிகளில் உடனடி நிவராண பணிகளுக்காக மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும். மேலும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழுவை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Chief Minister O Panneerselvam on Tuesday wrote to Prime Minister Modi on the toll Cyclone Vardah has taken on Tamil Nadu. The letter seeks the centre’s help and appeals for a special team to be deputed to study the damages caused by the cyclone. O Panneerselvam has also requested an urgent sanction of Rs 1000 crore from the National Disaster Management Fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X