நீட் தேர்வை ரத்து பண்ணுங்க.. பிளஸ் டூ மார்க் அடிப்படையில் அட்மிஷன்! மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
சென்னை: நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும் எனவும் விஜய் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்காக நம் நாட்டில், தேசிய தேர்வு முகமையால் நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக, ஆரம்பத்தில் இருந்தே இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வின் போது வினாத்தாள் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து நீட் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மறுதேர்வு விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வு ரத்து என செய்தி வெளியானதும், அந்த தேர்வை எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன.
இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களே நிரப்ப அனுமதிக்க, மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதில் கூறியிருப்பதாவது:-
தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG 2026), கடந்த 03.05.2026 அன்று 5,432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சுமார் 1.4 லட்சம் தமிழ்நாடு விண்ணப்பதாரர்கள் உட்பட, 22,05,035 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
விண்ணப்பதாரர் சிக்கலாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும், இவ்விவகாரம் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பான CBI-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ரத்து நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு ஆர்வலர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.
நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2024-ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆறு மாநிலங்களில் FIR-கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் CBI-க்கு மாற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உருவாக்கப்பட்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது.
அக்குழு, 95 விரிவான சீர்திருத்த பரிந்துரைகளை வழங்கியது. இவை அனைத்தையும் மீறி, இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதோடு, நீட் தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான ஒரு தேர்வில் உள்ள குறைபாடுகளுக்கும், கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கும் இதுவே உறுதியான சான்றாகும்.
நீட் (NEET) தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, தமிழ்நாடு அரசு அதனை தொடர்ந்து மற்றும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், தமிழ் வழி பயிற்றுமொழிப் பின்னணிகள் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையான தேர்வே முழுமையாக ரத்து செய்யவும், MBBS, BDS மற்றும் ஆயுஷ் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களே நிரப் அனுமதிக்கவும், ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது" என்று விஜய் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications