சட்டமன்றத் தேர்தல்: தமிழக - கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
குற்றாலம்: சட்டமன்றத் தேர்தலையொட்டி நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தமிழக,கேரளா போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது
தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி தமிழ்நாடு, கேரளா மாநில எல்லைப் பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் நேற்று நடந்தது.

இதில் நெல்லை மாவட்ட எஸ் பி. விக்ரமன், கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட ரூரல் எஸ் .பி. சசி குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் நுண்ணறிவு போலீசார் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரு மாநில எல்லைப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் கூடுதல் செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனையை தீவிரப்படுத்துவது, எல்லைப் பகுதியில் நடைபயணம் செல்வோர் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்றால் விசாரணை நடத்துவது.
பணம், மது மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிர கண்காணிப்பு செய்வது உட்பட பல்வேறு பணிகளை இரு மாநில போலீசார் இணைந்து மேற்கொள்வது, தேர்தல் அமைதியாக நடக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்












Click it and Unblock the Notifications