கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழர்கள் பங்கேற்பு!
கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் கலந்துகொண்டனர்.
ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புதிதாத கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழகத்தில் இருந்து 82 பேர் கலந்து கொண்டனர்.
கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் கோயிலில் கடந்த 7ம் தேதி திறப்பு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவால் திறப்பு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் டிச.23-ம் தேதி புதிய தேவாலயம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ராமேஸ்வரம் இருந்து 3 படகில் 100 பக்தர்களையாவது கச்சத்தீவு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் கச்சத்தீவு தேவாலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டு தமிழர்கள் 100 பேருக்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில், இன்று காலை திறப்பு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், இலங்கை கடற்படை, கடலோர காவல்படை அதிகாரிகள், நெடுந்தீவு மக்களுடன், தமிழகம் சார்பில் ராமேஸ்வரம் பங்குதந்தை சகாயராஜ் தலைமையில் 4 அருட் தந்தையர்கள் உள்பட 82 பேர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications