இருக்கு.. இன்னைக்கும் இருக்கு.. வானிலை மையம் ஹேப்பி நியூஸ்!!
தமிழகம், புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் சென்னை மாநகர் முழுவதும் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இடியுடன் கனமழை
இன்றும் பிற்பகல் முதல் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுநிலை
மத்திய வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தெற்கு ஆந்திரா முதல் கோவா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பது மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் தென்மேற்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி பலத்த காற்று வீசும் என்பதால் செப்டம்பர் 20-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகளவாக சோழவரத்தில் மழை
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நீலகிரி, ஆலங்குடி, மாதவரம், புதுக்கோட்டையில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications