டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்... தமிழகத்தில் 534 பேருக்கு நல்லாசிரியர் விருது
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களை கவுரப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் தமிழக அரசு சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது 534 ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை அவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு இந்த நல்லாசிரியர் விருது 1960ம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
1997ம் ஆண்டில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று பெயர் மாற்றப்பட்டுள்ள இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுப் பத்திரம், வெள்ளிப் பதக்கம், 5 ஆயிரம் ரொக்கம் பணம் வழங்கப்படும்.

இந்த விருதிற்கான ரொக்கப் பணத்தை 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதையடுத்து, இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெரும் 534 ஆசிரியர்கள் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசை பெறுவார்கள்.
அறிவிக்கப்பட்ட 534 நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களில் ஒரு சிலரின் பெயர் பட்டியல்:
மதுரை மாவட்டம் பாப்புநாயக்கன்பட்டி எஸ்கேவி (ஸ்ரீ கந்தசாமி வித்யாலயம்) மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இளமாறன் மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கணினி ஆசிரியர் ராஜ்குமார், ஈரோடு மாவட்டத்தில் சுகிர்தாபாய், பாப்பாத்தி, பெருந்துறை ஒன்றியத்தில் சுதமதி, வைஜெயந்தி, கண்ணதாசன், அம்மாபேட்டையில் பழனிச்சாமி ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்காக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
தஞ்சாவூரில் தலைமையாசிரியர் மணிமொழி, அம்சவள்ளி, ஒத்தைபுலிகுடியிருப்பில் தலைமையாசிரியர் லட்சுமி, புத்தாம்பூரில் தலைமையாசிரியர் சரவணன், தெம்மாவூர் தலைமையாசிரியர் ராசேந்திரன், உறையூர் ஆர்.சி கல்நாயக்கன் தெரு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அமல்சேசுராஜ் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுகுனா, புனிதா, அமலோர்பவ மேரி, சகாயராணி, ஞானாம்பாள் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வீரப்புடையான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமையாசிரியர் பி.ரா.தனபால், தாடிக்கொம்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கி.ஸ்ரீவாசன், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சீ.சுந்தரி, பழனி ஒபுளாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் அர.திருவாய்மொழி நம்பி, வேடசந்தூர் ஒன்றிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ப.நடராஜன், வடமதுரை வி.குருந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ம.ராயப்பன், திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நா.ராமானுஜம், அண்ணாமலை ஆலை மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.உஷா, பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கு.பழனிச்சாமி, ஒட்டன்சந்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கி.பாலதண்டாயுதம் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நாளை நடைபெறும் விழாவில் 534 ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருதினை பெற உள்ளனர்.












Click it and Unblock the Notifications