For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்கள் 'வணக்கம்' சொல்லவே கூடாது... சுயமரியாதைச் செல்வர் மா.நன்னனின் அட்டகாச பேச்சு!

வணக்கம் சொல்வது தமிழர் முறையே அல்ல ஆரிய வழியில் வந்தது என்பதை அழகிய நடையில் சொன்னவர் மறைந்த தமிழறிஞர் மா. நன்னன்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழர்கள் வணக்கம் சொல்லவே கூடாது! ஏன் தெரியுமா?- வீடியோ

    சென்னை : வணக்கம் சொல்வது தமிழர் முறையே அல்ல ஆரிய வழியில் வந்தது. ஒருவருக்கொருவர் ஏன் வணக்கம் சொல்ல வேண்டும், வாழ்த்து தான் சொல்ல வேண்டும் என்று சுயமரியாதையை விதைத்தவர் மறைந்த தமிழறிஞர் மா.நன்னன்.

    தமிழை தனது முழுமூச்சாக நினைத்து வாழ்ந்து வந்தவர் முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன். மக்களிடத்தில் தமிழை எளிய நடையில் கொண்டு சேர்ப்பதில் இறுதி வரை செயல்பட்டு வந்தவர்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளானாலும், நிகழ்ச்சியில் பேரூரையானாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் அவரது பேச்சுகள் இடம்பெற்றிருந்தன.

     தலைவணங்கா தமிழறிஞர்

    தலைவணங்கா தமிழறிஞர்

    பெரியாரின் சிந்தனைகளை விதைத்துக் கொண்டிருந்த அவரின் பேச்சுகள் சுயமரியாதையை காப்பதாகவும் இருந்தது. நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்தால் வணக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இது தமிழர் பாரம்பரியம் என்று கூட நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அது தவறு என்று உரக்கச் சொன்னர் பேராசிரியர் நன்னன்.

    வாழ்த்து தான் சொல்ல வேண்டும்

    நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் வணக்கம் சொல்கிறோம். அது தவறு, வணக்கம் சொல்வது முட்டாள்தனம், தமிழர் வரலாற்றில் எங்குமே வணக்கம் என்ற குறிப்பே கிடையாது. சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது கூட மக்கள் அனைவரும் வாழ்த்து தான் சொன்னார்களேத் தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ' அதாவது வாழ்க அரசர் என்று தான் சொன்னார்கள்.

     வணக்கம் ஆரியர்களின் வழக்கம்

    வணக்கம் ஆரியர்களின் வழக்கம்

    ஆரிய பழக்கம் வந்த பின்னர் தான் நமஸ்ஹாரம் என்று ஒருவரைஒருவர் பார்த்து சொன்னார்கள். அதைத் தமிழில் எப்படி சொல்வது என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து தான் வணக்கம் நம்மை தொற்றிக் கொண்டது. புத்தக விழாக்களில் புத்தகம் தான் தர வேண்டும் ஆனால் சால்வை போர்த்துகிறார்கள். இந்த சால்வை என்னத்துக்கு ஆகும். அதனால் வீட்டை சாணி போட்டு மெழுக முடியுமா, அல்லது கார் தான் துடைக்க முடியுமா.

     கைத்தறித் தொழிலாளர் நலன்

    கைத்தறித் தொழிலாளர் நலன்

    ஏதோ புகைப்படத்திற்கு பார்க்க பலபல வென்று இருக்கும். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. கைத்தறி நெசவாளர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக சால்வை போர்த்தும் பழக்கத்தை அண்ணா கொண்டுவந்தார். ஆனால் இப்போது இதை வைத்து யார் பிழைக்கிறார்கள் என்று சென்னை புத்தகத் திருவிழாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பங்கேற்ற போது நன்னன் உரையாற்றினார்.

    English summary
    Tamil Scholar Nannan said that saying Vanakkam to eah other is not Tamilian's culture and it is all foolishness, congragulating is only in the Tamil culture he added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X