உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க ஜூன் 12-ல் தவாக செயற்குழு கூட்டம்: வேல்முருகன்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் வரும் 12-ந் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 12-ந் தேதி சென்னை கோயம்பேடு விஜய்பார்க் ஹோட்டலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள், உள்ளாட்சித் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதனையே அழைப்பாக ஏற்று அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் பங்கேற்று தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைக்க வேண்டுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications