ரஜினி கொடும்பாவி வெடி வைத்து தகர்ப்பு.. தமிழர் அமைப்பினர் கைது.. சென்னையில் பரபரப்பு
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பு ஒன்று ரஜினியின் கொடும்பாவியை வெடி வைத்து தகர்த்தது. இதனால் போயஸ் கார்டன் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை; கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
5 நாட்கள் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கு சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

முற்றுகைப் போராட்டம்
தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பு இன்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தபடி, அந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ரஜினியின் வீடு நோக்கி வந்தனர்.

வெடுகுண்டு வைத்து தகர்ப்பு
செம்மொழி பூங்காவில் சுமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதனையும் தாண்டி ரஜினியின் கொடும்பாவி வெடி குண்டு வைத்து போராட்டக்காரர்கள் தகர்த்தனர்.

சாலை மறியல்
இது நடந்து கொண்டிருக்கும் போதே போராட்டத்தில் பங்கேற்ற இன்னொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

கைது
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரலட்சுமியை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருடன் வந்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ரஜினிகாந்த்தின் வீட்டின் அருகே கூடுதலாக போலீசார் போடப்பட்டிருந்த நிலையில், இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications