அடுத்த பிரதமர் யார் என கைகாட்டுவதற்கு இப்போதே போட்டியா?... திமுகவை நக்கல் செய்யும் தமிழிசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த பிரதமர் யார் என கைகாட்டுவதற்கு இப்போதே போட்டியா என டுவிட்டர் பக்கத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனிடம் கேட்டு நக்கலடித்துள்ளார் தமிழிசை சவுந்திரராஜன்.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜகவை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்கவும் வியூகங்களை வகுத்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ்- பாஜக அல்லாத கூட்டணிக்கு வித்திடும் வகையில் 3-ஆவது அணி அமைவது குறித்தும் சில கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

திமுக வலுபெற்றுள்ளது

திமுக வலுபெற்றுள்ளது

இந்நிலையில் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்பு விழா, கருணாநிதி நினைவேந்தல் விழாக்களில் பேசியவர்கள் ஸ்டாலின் கைகாட்டும் நபரே இந்தியாவின் அடுத்த பிரதமர் என கூறினர். அந்தளவுக்கு திமுக வலுப்பெற்றுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அடுத்த பிரதமர் யார்

அடுத்த பிரதமர் யார்

அதுபோல் நேற்று ஈரோட்டில் மதிமுக ஒருங்கிணைத்த முப்பெரும் விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் அடுத்த பிரதமர் யார் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டுவார் என்றார்.

நாம் கைகாட்டும் நபரே

நாம் கைகாட்டும் நபரே

இந்நிலையில் சமாஜவாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது அடுத்த பிரதமரை சமாஜவாதி கட்சிதான் முடிவு செய்யும். நாம் கைகாட்டும் நபரே அடுத்த பிரதமர் என்றார்.

தமிழிசை கிண்டல்

இதுகுறித்து தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் உத்தரப்பிரதேசம் கை காட்டுபவரே நாட்டின் அடுத்த பிரதமர்...அகிலேஷ் யாதவ் பேட்டி....திமுக தலைவர் ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்தபிரதமர் என்று கூறிவரும் அண்ணன் துரைமுருகன் பார்வைக்கு...சமர்ப்பணம்.கை காட்டுவதற்கே இப்போதே போட்டியா? என்று நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+