தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே இனி மோடிதான் அம்மா- தமிழிசை அறைகூவல்
தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே இனி மோடிதான் அம்மா என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
Recommended Video

மதுரை: தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே இனி மோடிதான் அம்மா என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
மதுரை ஒத்தக்கடையில் பாஜக மகளிரணி தமிழ் மகள் தாமரை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும். எத்தனை கேலி, கிண்டல் செய்கிறீர்கள். அதுவும் ஒரு பெண் தலைவர் என்றால் எத்தனை கேலி செய்கிறீர்கள்.

மென்மையானவர்கள்
ஆனால் ஒரு பெண் நினைத்தால், இத்தனை தாய்மார்கள் நினைத்தால் தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றி காட்ட முடியும் என்ற சரித்திரத்தை எழுதும் கூட்டம் இங்கு உள்ளது. பெண்கள் என்றால் மென்மையானவர்கள் என்று கணக்கு போட்டுவிடாதீர்.

சரித்திரம்
வருங்காலத்தில் வாருங்கள், எங்களை எதிர்த்து போட்டி போடுங்கள். பாரதிய ஜனதா கட்சி என்றால் ஆட்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா. இங்கு பெண்கள், தாய்மார்கள் இருக்கிறார்கள். பாஜக என்றால் வெற்றி கிடைக்கும் என்பதை சரித்திரமாக எழுத வந்திருக்கிறார்கள்.

வெற்றியாக முடியும்
முளைப்பாரி எடுத்து வந்த பெண்களுக்கு எனது வணக்கம். ஏனென்றால் மதுரையில் எது தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும். நான் மருத்துவம் படித்துள்ளேன். அதுவும் வெளிநாடுகளில் படித்துள்ளேன். மேற்படிப்பு படித்துள்ளேன்.

சிறு பள்ளியில் ஆரம்பக் கல்வி
ஆனால் ஆரம்ப பள்ளியை அன்னை மீனாட்சியை வணங்கிவிட்டு மதுரையில் ஒரு சிறு பள்ளியில் படித்த நான் ஒரு கட்சியின் மாநில தலைவராக உருவெடுத்துள்ளேன் என்றால் மதுரையில் எது ஆரம்பித்தாலும் அது வெற்றி பெறும் என்பதை நானே உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

இந்தியாவுக்கு மோடிதான் அம்மா
தமிழகத்தில் அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்ப தமிழகத்தின் இன்னொரு அம்மா யாரு என்று என்னிடம் கேட்கிறார்கள். தமிழகத்துக்கு மட்டுமில்லை இந்தியாவுக்கு அம்மா யாரென்றால் மோடி என்று என்னால் சொல்ல முடியும். ராகுல் காந்தியோ கண்டபடி பேசினார், கட்டிபிடித்தார், கண்ணடித்தார், நாடாளுமன்றத்துகே களங்கம் விளைவித்தார்கள். ஆனால் தனது கலக்கல் பேச்சால் அவரை மோடி கலங்கடித்தார்.

பிரசாரத்துக்கு மோடி தேவை
மகாராஷ்டிரத்தில் ராகுல் மோடியை கட்டிப்பிடிக்கும் படத்தை வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. அதாவது எங்களை எதிர்ப்பவர்களை கூட நாங்கள் அன்பால் வெல்லுவோம் என்று கூறி பிரசாரம் செய்கின்றனர். காங்கிரஸின் பிரசாரத்துக்குக் கூட மோடியின் படத்தை சுவரொட்டியில் ஒட்டினால்தான் உங்களுக்கு விளம்பரம் கிடைக்கும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி சீரழித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்றார் தமிழிசை.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications