எச் ராஜாவின் வாதம் சரி... ஆனால் அது தவறுதான்... ஒப்புக் கொண்ட தமிழிசை
சென்னை: போலீஸாருக்கு எதிராக எச் ராஜா வாதம் செய்தது சரி. ஆனால் அவர் கூறிய வார்த்தையில் தமக்கு ஒப்புதல் இல்லை என தமிழிக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா. இதையடுத்து போலீஸார் மற்றும் நீதிமன்றத்தினை தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு எதிராக 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சியில் தமிழிசை பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எச். ராஜா பேசியது குறித்து உண்மை கண்டறிந்த பின் தனது கருத்தைக் கூறுவதாக தெரிவித்தார். மேலும் போலீஸாருடன் எச் ராஜா செய்த வாதம் சரிதான். ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தையில் எனக்கு ஒப்புதல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications