ஸ்டாலின் அந்த ட்வீட் போட்டிருக்கவே கூடாது.. தமிழிசை காட்டம்!
ஸ்டாலினின் ட்விட்டருக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை: தூத்துக்குடி விமானத்தில் தமக்கு கண்டனம் தெரிவித்த சோபியாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமானத்தில் பயணிக்கும்போது, சோபியா என்ற இளம்பெண் பாஜக அரசுக்கு எதிராக பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக' என்று முழக்கமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், அந்த பெண்ணிடம் நேரியாடையாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகளிடமும் புகாரும் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சோபியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து பின்னர் 15 நாள் காவலில் வைக்கவும் உத்தரவிட்டனர். இந்த விவகாரத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் தனது பதிவுகளை பதிவிட்டிருந்தார். அதில்,
|
ஸ்டாலினின் ட்விட்டர்
``ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கின்றேன்! `பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக!" என்று பதிவிட்டிருந்தார்.

தமிழிசை கண்டனம்
ஸ்டாலினின் இந்த ட்வீட் தமிழிசைக்கு மேலும் கோபத்தை கூட்டியுள்ளது. ஸ்டாலின் அந்த ட்வீட்டை அப்படி பதிவிட்டிருக்க கூடாது என்று தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் செய்தியாளர்களிடம் பேசும்போது வெளிப்படுத்தினார்.

தவறான அரசியல்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை பேசியதாவது: ``உண்மையிலேயே இது தவறான அரசியல். சக அரசியல்வாதிக்கு அச்சுறுத்தல் கொடுக்கபட்டதை ஆதரிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதே நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டால் நான் முதல் ஆளாக எதிர்த்திருப்பேன். ஜனநாயக உரிமை என்று கூறிக்கொண்டு விமானத்தின் உள்ளே அந்தப் பெண் ஒழுக்கமில்லாமல் நடந்துகொண்டதைத் தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரிப்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. ஸ்டாலின் சரியான அரசியலை நடத்தவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

கருணாநிதி இருந்திருந்தால்...
ஸ்டாலின் அந்த ட்வீட் போட்டிருக்கக்கூடாது. இதனை நான் கண்டிக்கிறேன். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் இதுபோல் நடந்திருக்க மாட்டார். அவர்களும் விமானத்தில் செல்லும்போது இதேபோன்ற சம்பவம் நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது அவர்களது தொண்டர்கள் தான் ஜனநாயக உரிமை என அமைதியாக இருப்பார்களா? இது போன்ற நிகழ்வு அவருக்கு நடந்திருந்தால் நான் முதல் ஆளாக அவருக்கு ஆதரவாக கண்டனம் தெரிவித்திருப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications